PUBLISHED ON : மே 17, 2025

வளநாடு கிழக்குப் பகுதியில் வனம் அடர்ந்து இருந்தது. அதில், மரங்களும், செடி, கொடிகளும் வளர்ந்திருந்தன. விலங்குகளும், பறவைகளும் சுதந்திரமாக திரிந்தன.
அண்டை நாட்டின் மன்னன், போர் வீரர்களை வனத்திற்குள் ஊடுருவ செய்தான். ஒற்றர்கள் வழியாக, தகவல் அறிந்த வளநாடு மன்னன் பெரும் படையுடன் வனப்பகுதிக்கு சென்றான். மறைந்திருந்து இருதரப்பினரும் உயிர்ச்சேதமின்றி போரிட்டனர்.
முடிவில், எதிரி நாட்டு வீரர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் தப்பியோடினர்.
ஆனால், காட்டில் விலங்குகளும், மிருகங்களும், செடி, கொடி, மரங்களும் அழிந்தன.
வளநாடு மன்னன் வெற்றி களிப்போடு வனப்பகுதியை விட்டு வெளியேறினான். அவனை, இரு யானைகள் வழி மறித்து நின்றன. காரணம் வினவினான் மன்னன்.
'இந்த அடர்ந்த வனப்பகுதியில், விலங்குகளும், மிருகங்களும் நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். படையுடன் நுழைந்து போரிட துவங்கிய நாள் முதல் அழிய துவங்கி விட்டோம். காட்டில் உயிரினங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது...' என்றது பெரிய யானை.
'வீரர்களின் உயிரை மாய்க்காமல் லாவகமாகத்தானே போரிட்டோம்...'
'நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது மன்னா... இயற்கையின் படைப்பில், மனித உயிர், மிருக உயிர், மரம், செடி, கொடி உயிர் அனைத்துமே ஒன்று தான்... போரை தவிர்த்து சமாதானம் விரும்பினால், எந்த உயிரினத்துக்கும் சேதம் வராது. இதுவே வனத்தில் வாழும் எங்கள் விருப்பம்...'
பெரிய யானையின் உருக்கமான பேச்சு மன்னனை சிந்திக்க வைத்தது.
அன்று முதல் அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்து, அமைதியான சூழ்நிலையை உருவாக்கினான்.
மக்களுடன், வன விலங்குகளும் மகிழ்ச்சியுடன் வாழ துவங்கின. செடி, கொடி, மரங்கள் தழைத்து வளர்ந்து முன்னிலும் அடர்ந்த வனப்பகுதி உருவானது!
குழந்தைகளே... உலகில் போர், பகை, அச்சம் நீங்கி வாழ பாடுபடுவோம்.