திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2000ல், 10ம் வகுப்பு படித்தபோது தமிழாசிரியையாக இருந்தார் புஷ்பலதா. வகுப்பறையை கலகலப்பாக வைத்திருப்பார். கதைகள் வழியாக பாடங்களை விளக்கி சந்தேகங்களை போக்குவார். நகைச்சுவையுடன் உரையாடி தயக்கத்தை அகற்றுவார்.
பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து சுவாரசியமான மேற்கோள்கள் தந்து மொழியார்வத்தை கூர்மையாக்குவார். ஒழுக்க நெறியோடு வாழும் வழிமுறையை மனதில் பதியும்படி போதித்து கடைபிடிக்க வைப்பார். கூடுதலாக பாடக்குறிப்புகள் தந்து கல்வியில் பயிற்சிக்கு உதவுவார்.
இதுபோல் அவரது கற்பித்தல்முறை வித்தியாசமாக அமைந்திருந்தது. அதை பின்பற்றி சிறப்பாக தேர்ச்சி பெற்றேன். மேல்நிலை படித்தபோது தெலுங்கை தாய்மொழியாக உடைய தோழியர் சிலர் என் வகுப்பில் இருந்தனர். ஆங்கில பயிற்று மொழியுடையோரும் தமிழ் படிப்பதில் சிரமப்பட்டு வந்தனர். இவர்களுக்கு, அந்த தமிழாசிரியையின் போதனை பாணியில் விளக்கி புரிய வைத்து புகழ் பெற்றேன். இந்தச் செயல் என்னை உயர்த்தியதுடன் வகுப்பறையில் பிரபலமாக்கியது.
தற்போது என் வயது, 39; பள்ளியில் தமிழாசிரியையாக பணி புரிகிறேன். கதை, கவிதை, கட்டுரைகளும் எழுதுகிறேன். பல கல்வி வாரிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் பயிற்றுவித்து வெற்றியடைந்துள்ளேன். இந்த உயர்வுகள், பள்ளி தமிழாசிரியை புஷ்பலதாவிடம் கற்றதால் கிடைத்தவை என பெருமிதம் கொள்கிறேன்.
- வ.தீபா, சென்னை.