Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நேர்மைக்கு வழி!

நேர்மைக்கு வழி!

நேர்மைக்கு வழி!

நேர்மைக்கு வழி!

PUBLISHED ON : மே 03, 2025


Google News
Latest Tamil News
திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 1979ல், 7ம் வகுப்பு படித்தபோது தமிழாசிரியராக இருந்தார் சாமி சம்பந்தம். ஒருநாள் மனப்பாடப் பகுதியில், 'எல்லா செய்யுளையும் ஒரே வாரத்தில் படித்து விட வேண்டும்; அதை முறையாக மனப்பாடம் செய்து சொல்வோருக்கு மதிப்புமிக்க பரிசுகள் தருவேன்...' என போட்டி அறிவித்தார். உற்சாகமாக ஏற்றோம்.

அன்று வீட்டுக்கு சென்ற போது, உறவினர்கள் வந்திருந்தனர். ஆறு நாட்கள் தங்கி இருந்த அவர்களுடன் கலந்ததால், ஆசிரியர் சொன்னதை மறந்துவிட்டேன். எதையும் படிக்கவில்லை. ஏழாம் நாள் வகுப்புக்கு சென்ற பின் தான், போட்டி அறிவிப்பு நினைவுக்கு வந்தது.

தமிழாசிரியர், 'செய்யுள்களை படித்து வந்தீர்களா...' என்று கேட்டார். நடுக்கத்துடன் எழுந்து, 'படிக்கவில்லை ஐயா...' என உண்மையை கூறினேன். அருகில் அழைத்தவரிடம், 'அடி விழப்போகிறது' என பயத்துடன் சென்றேன். மென்மையாக விசாரித்தார். எதையும் மறைக்காமல் சொன்னதால் பாராட்டி பரிசு கொடுத்தார். அதுமுதல் எந்த செயலிலும் உண்மையை பேசி, அதன்படி நடந்து கொள்கிறேன்.

என் வயது 57; ஜோதிடராக பணி செய்கிறேன். என்னிடம் சேவை பெற வருவோரிடம் உண்மைக்கு மாறாக சொல்லி ஏமாற்றுவதில்லை. நேர்மையாக வாழும் வழியை ஊக்குவித்த பள்ளி தமிழாசிரியர் சாமி சம்பந்தம் பாதத்தில் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

- எஸ்.மாதவன், சென்னை.

தொடர்புக்கு: 93602 54143






      Our Apps Available On




      Dinamalar

      Follow us