Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (299)

இளஸ் மனஸ்! (299)

இளஸ் மனஸ்! (299)

இளஸ் மனஸ்! (299)

PUBLISHED ON : ஏப் 26, 2025


Google News
Latest Tamil News
அன்பு அம்மாவுக்கு...

என் வயது, 17; பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி. வகுப்பாசிரியை பாடம் நடத்தும் போது, தலையை சொரிந்து கொள்வார். சக மாணவி அக்குளை சொரிந்து கொள்வார். எங்கள் கணித ஆசிரியர் நுனி மூக்கை சொரிந்து கொள்வார்.

சிலர் ரகசியமாக கவட்டையை சொரிந்து கொள்வர்; அரிப்பு என்பது ஒரு வியாதியா... இது பற்றி சரியான விளக்கம் கூறுங்கள்.

இப்படிக்கு,

ஆர்.கஸ்துாரி மங்கை.



அன்பு மகளுக்கு...

உடலில் ஏற்படும் அரிப்பை தமிழில் பிரித்தெடுக்கை, தினவு, சொரிதல், சினம், குற்றம் எனவும் கூறுவர்.

ஆங்கிலத்தில், 'புருரைட்டஸ்' என்பர். தோலில் ஏற்படும் ஒருவித சங்கட உணர்வே, அரிப்பு எனப்படுகிறது.

அரிப்பு ஒரு முரட்டுத்தனமான வேட்கை.

மனிதர்களுக்கு, 'ஹிஸ்டைமைன்' இயல்பாக சுரக்கும்.

அது, அளவுக்கு அதிகமாக சுரந்தால் அரிப்பு ஏற்படும்.

நான்கு வகை அரிப்புகள் உண்டு. அவை...

தோல் சார்ந்த அரிப்பும், வீக்கமும்

நரம்பு சார்ந்த அரிப்பு

நரம்பு திசு சார்ந்த அரிப்பு

உளவியல் சார்ந்த அரிப்பு.

அரிப்பு உணர்வு ஏற்பட பல காரணங்கள் உண்டு.

அவற்றில் சில...

வைட்டமின் - ஏ அல்லது கால்ஷியம் குறைபாடு

சுயசுத்தம் பேணாததால் வரும் பூஞ்சை வைரஸ் தொற்று

பேன் மற்றும் பொடுகு தொல்லை

உடல் வெப்ப மாற்றம் மற்றும் ஈரப்பதம்

துாசி, பூனை, நாய், மகரந்ததுாளால் ஏற்படும் ஒவ்வாமை

கல்லீரல் நோய், சிறுநீரக நோய் மற்றும் நீரழிவு நோய், உலர்தோல், கர்ப்ப அறிகுறி

பூரான், தேனீ, கொசு, வண்டுக்கடியின் வெளிப்பாடு

மீன், ஆல்கஹால், ஊறுகாய், புளித்த நாட்பட்ட உணவால் ஒவ்வாமை

நிக்கல் அலர்ஜி, எக்சிமா, சொறி சிரங்கு, சொரியாசிஸ்

மன அழுத்தம், நீண்ட நாள் தழும்பு மற்றும் தீக்காயத்தின் வெளிப்பாடு.

மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டால் அரிப்பை குணப்படுத்தலாம். அக்குள், காதுமடிப்பு, கவட்டை போன்ற இடங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். துவைத்து உலர்த்திய பருத்தி ஆடைகளை அணியலாம்.

பேன் தொல்லைக்கு, 'கென்ஸ்' தடவி குளிக்கலாம். வேப்பம் இலை, புதினா இலைகளை அரைத்து தலையில் தடவி குளிக்கலாம். அவ்வப்போது, ஓட்ஸ் தானியத்தில் தயாரித்த கஞ்சி குடிக்கலாம். சிலர் மூக்கு, தலை சொரிதலை மேனரிசமாக வைத்திருப்பர். அது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பூச்சிக்கடி வாய்ப்புகளையும் தவிர்க்கலாம். அலர்ஜி தரும் உணவுகளுக்கு 'நோ' சொல்லலாம். இவற்றின் வழியாக, அரிப்பு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us