PUBLISHED ON : பிப் 08, 2025

அன்புள்ள அம்மா...
என் வயது, 10; தனியார் பள்ளி ஒன்றில், 5ம் வகுப்பு படிக்கும் மாணவி. நாங்கள் வசிக்கும் தெருவில், வயதான புகைப்படக்கலைஞர் ஒருவர் இருக்கிறார்.
எப்போதும், என்னை பார்த்தவுடன், 'ஹாய் பிங்கி...' என, அன்பாய் அழைப்பார். முதலில் அந்த சொல்லுக்கு அர்த்தம் புரியவில்லை. வகுப்பு தோழியரிடம் விசாரித்தேன். பிங்கி, ஜிம்மி, டாமி போன்றவை நாய்களுக்கு சூட்டும் பெயர் என்றனர். அதை கேட்டதும் குழப்பம் ஏற்பட்டது.
அந்த தாத்தா என்னை திட்டுகிறாரா, பாராட்டுகிறாரா என்பது தெரியவில்லை. பிங்கி என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் கூறி, என் சந்தேகம் போக்கி, மன அமைதிக்கு வழி காட்டுவீர்கள் என நம்புகிறேன்.
இப்படிக்கு,
எஸ்.எம்.சாந்தஷீலா.
அன்பு மகளே...
ஆங்கிலத்தில், 'பிங்க்' என்ற சொல் இளம் சிவப்பு வண்ணத்தைக் குறிக்கும். அந்த வண்ணம் பெண்மை செயல்பாடுகளின் தொகுப்பு என கூறலாம். மேற்கத்திய நாடுகளில் நிலவும் கலாசாரம், இளம் சிவப்பு நிறத்தை, கனிவு, மென்மை, இரக்கம் போன்ற குணங்களை குறிக்கும் அடையாளமாக கருதுகிறது. அழகு, பிறர் மீது அக்கறை, சமூக ஒத்துழைப்புக்கான குறியீடாக இந்த நிறம் கருதப்படுகிறது.
உயிரியல் ரீதியாக, பெண்ணுக்கும், இளம் சிவப்பு நிறத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆண்களுக்கு, நீல நிறமும், பெண்களுக்கு இளம்சிவப்பு நிறமும் கொடுத்து, பாலின பேதம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.
மார்பக புற்றுநோய், பெண்ணுரிமை, திருநங்கையர் சமூகத்தை மேம்படுத்தும் விழிப்புணர்ச்சி திட்டங்களில், இளம் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சம உரிமை வழங்குதல், அதிகாரமளித்தல் போன்ற செயல்பாடுகளிலும் இளம் சிவப்பு நிறம் உபயோகப்படுகிறது.
பெண்களை குறியீடு செய்வதற்கு, பிங்க் என்ற வார்த்தை, 1940ல் பயன்பாட்டுக்கு வந்தது.
தற்சமயம், பிங்க் என்றால் அழகு, பணிவு, உணர்திறன், மென்மை, இனிமை, குழந்தைமை, பெண்மை, காதல் போன்றவற்றை குறிக்கிறது.
ரோஜா, செம்பருத்தி, மணி வடிவ மலர், சீமை அல்லி, வெண்சிவப்பு மலர், ஜப்பானிய ரோசி, ஜப்பானிய செர்ரி போன்றவற்றின் பூக்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். எழில் மிக்க பிளமிங்கோ என்ற நாரை வகை பறவை, இளம் சிவப்பு நிறத்தில் தான் ஜொலிக்கிறது.
ஒருவர் ஆரோக்கியமாய் இருப்பதை, 'உங்கள் தயவால் மிக இளஞ்சிவப்பாக இருக்கிறேன்...' என மரியாதை தொனிக்க கூறுவர்.
குடிமயக்கத்தில் பார்க்கும் பிரமைகளை, 'பிங்க் யானை' என்று உரைப்பர், போதைக்கு அடிமையானோர்.
பொதுவாக, பிங்க் என்பது நீல சிவப்புக்கும், சிவப்புக்கும் இடைய உள்ள வர்ணச் சாயல்.
நீ குறிப்பிடும் தாத்தா, உன்னை பெருமையாக மகிமைப் படுத்தும் விதமாய் தான், பிங்கி என கூப்பிடுவதாக எனக்கு படுகிறது. தவறுதலாக ஏதும் இருப்பதாக தெரிவில்லை.
உலகளாவிய பெண்மையின் குறியீடாக உள்ளது இளம் சிவப்பு வண்ணம். இந்த நிறத்தால், பெண்மை பெருமையும், மரியாதையும் அடைய வேண்டும். பெண்களால் பிங்க் நிறம் பெருமையடையட்டும். பிங்க் மோளே! நினக்கு மனசிலாயோ!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.