Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டபுள் புரோமோஷன்!

டபுள் புரோமோஷன்!

டபுள் புரோமோஷன்!

டபுள் புரோமோஷன்!

PUBLISHED ON : பிப் 15, 2025


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார், ஏரிக்கரை பள்ளியில், 1945ல், 2ம் வகுப்பு படித்த போது, பாட்டி ராஜம்மாள் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கிருந்து, அண்ணன் ராமனுடன் தவறாது பள்ளிக்கு சென்று வருவேன். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் டியூஷன் ஏற்பாடு செய்திருந்தார் பாட்டி.

ஒவ்வொரு நாளும் காலை, 7:00 மணிக்கு அது துவங்கும். அதற்காக, அதிகாலை 5:50 மணிக்கே எழுந்து தயாராவோம். துாய உடையணிந்து வருவார் தனிப் பயற்சி ஆசிரியர் ராஜம் ஐயங்கார். விளக்கமாக பாடங்களை கற்பிப்பார். ஒழுக்கமுடன் வாழும் முறையையும் போதிப்பார். கையெழுத்து முத்து முத்தாக அமைய வேண்டும் என்பார். அதை வலியுறுத்தி, 'எழுத்துகளை உற்று பார்த்து, 'க' மற்றும், 'ந' விற்கு இருக்கும் தொப்பைகளை கவனித்து எழுது...' என நகைச்சுவை பொங்க கூறுவார்.

கணித பாடத்தை எளிமையாக புரிய வைப்பார். அப்போது வகுப்பில் இருமுறை, 'டபுள் புரோமோஷன்' கிடைத்தது. அதாவது, அரையாண்டு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றதால் பாராட்டி அடுத்த மேல் வகுப்பிற்கு அனுப்பினர். அக்காலத்தில் இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது.

இவ்வாறு படிப்பை சிறப்புடன் முடித்தேன். திருமணத்துக்கு பின், கணவரோடு சென்னை செல்ல அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடையில் நின்றிருந்தேன். எதிர்பாராமல் அந்த நல்லாசிரியரை அங்கு கண்டேன். சூழலை மறந்து, அவர் பாதங்களில் விழுந்து ஆசி பெற்றேன்.

தற்போது, என் வயது, 86; இல்லத்தரசியாக இருக்கிறேன். வாழும் ஒழுங்கை கற்றுத்தந்த ஆசிரியரை நாளும் வணங்கி மகிழ்கிறேன்.



- வி.மைதிலி, சென்னை.

தொடர்புக்கு: 94454 05694






      Our Apps Available On




      Dinamalar

      Follow us