Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அயராத உழைப்பு!

அயராத உழைப்பு!

அயராத உழைப்பு!

அயராத உழைப்பு!

PUBLISHED ON : மே 03, 2025


Google News
Latest Tamil News
விருதுநகர் மாவட்டம், சின்னகாமன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1977ல், 10ம் வகுப்பு படித்தேன். சொந்த கிராமத்தில் இருந்து, 1 கி.மீ., நடந்தே பள்ளிக்கு செல்வேன். தலைமையாசிரியரான வீ.வீராசாமி, எங்களுக்கு வகுப்பாசிரியராகவும் இருந்தார். மிகவும் கண்டிப்பு மிக்கவர்; பார்வையாலே மிரட்டி கட்டுப்படுத்துவார். தேவை அறிந்து உடனுக்குடன் உதவுவார். சக ஆசிரியர்களை கண்காணித்து முறையாக வேலை வாங்குவார்.

பள்ளி அருகே காலை 8:20 மணிக்கு ஒரு பேருந்து வரும். ஆசிரியர், மாணவர்கள் உடனே, 'அலர்ட்' ஆகி விடுவர். அந்த பேருந்தில் தான் வருவார், தலைமையாசிரியர். குடை, பையுடன் கம்பீரமாக பள்ளி வளாகத்துக்குள் நுழைவார். அது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

காலை இறை வணக்க கூட்டத்தில் வாழ்க்கைக்கு உபயோகமான தகவல்களை சொல்வார். அன்று, 'அயராது உழைத்தால் எந்த செயலிலும் ஜெயிக்கலாம்...' என அறிவுரைத்தார். அதை மனதில் பதித்து பள்ளி படிப்பை சிறப்பாக நிறைவு செய்தேன். கல்லுாரியில் சேர்ந்து நன்கு படித்தேன். ஆய்வுகள் செய்து டாக்டர் பட்டம் பெற்றேன்.

தற்போது என் வயது, 60; பல்கலைக் கழகத்தில் நுாலகராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில் மாணவர்களுக்கு குறைவின்றி உதவிகள் செய்தேன். இன்றும் புத்தெளிச்சியுடன் செயல்படுகிறேன். இதுபோல் வாழ்வதற்கு உற்சாகம் ஊட்டிய பள்ளி தலைமையாசிரியர் வீராசாமியை நன்றியுடன் போற்றுகிறேன்.



- ரா.பத்மாவதி, சிவகங்கை.

தொடர்புக்கு: 94863 61235






      Our Apps Available On




      Dinamalar

      Follow us