Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அறிவுக்கண்!

அறிவுக்கண்!

அறிவுக்கண்!

அறிவுக்கண்!

PUBLISHED ON : ஏப் 05, 2025


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2016ல், 9ம் வகுப்பு படித்த போது, சமூக அறிவியல் ஆசிரியையாக இருந்தார் தேவிமயில். பாடத்தில் இடம் பெறும் புகழ் பெற்ற ஆளுமைகள் பற்றிய செய்திகளை சுவைபட கதை போல் கூறுவார்.

அதிலும், ஜான்சிராணி, இந்திராகாந்தி, ஜோன் ஆப் ஆர்க் என, தைரியமிக்க பெண்களை பற்றி அடிக்கடி எடுத்துரைப்பார். அவர்கள் போல புகழ் பெற ஒரே ஆயுதம் கல்வி என வலியுறுத்துவார். பாடல்கள் வழியாக பாடங்களை மனதில் பதிய வைப்பார்.

நான், பிளஸ் 2 முடித்ததும் குடும்ப சூழல் காரணமாக, புத்தகக் கடைக்கு வேலைக்கு சென்றேன். அதை அறிந்து தொலைதுார கல்வியில் பட்டப்படிப்பு சேர அறிவுரைத்தார் அந்த ஆசிரியை. அதை ஏற்று, வேலைக்கு சென்றபடியே இளங்கலை படிப்பை முடித்தேன்.

இப்போது, என் வயது, 22; தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக பணி செய்கிறேன். ஆசிரியர் பயிற்சி கல்வியான பி.எட்., வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறேன். ஆசிரியர் பணி ஏற்று நல்ல குருவாக வழிகாட்ட விரும்புகிறேன். அதற்கு அறிவுக்கண் திறந்த அந்த ஆசிரியருக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்!

- மு.செல்லமணி, கள்ளக்குறிச்சி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us