சென்னை, ஆலப்பாக்கம், சீமா மாடர்ன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், 2004ல், 5ம் வகுப்பு படித்த போது, முழு ஆண்டு தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். பள்ளி வளாகம் மிகவும் ரம்மியமாக இருக்கும். சுற்றிலும், தென்னை மரங்கள் பசுமை தரும். சிலு சிலுவென காற்று வீசும். அங்கு அமர்ந்து படிப்பது என்றால் ஆனந்தம் பொங்கும்.
வகுப்பு ஆசிரியை சுதா, ஹிந்தி பாடமும் கற்பித்தார். வித்தியாசமான ரசனை உள்ளவர். மைதானத்தில் படிப்பதற்கு உற்சாகமளிப்பார். அன்றும் அதுபோல் அனுப்பினார். ஆங்கில ஆசிரியை ரூபியுடன், எங்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்.
திடீரென என்னை அவசரமாக அழைத்தவரை ஒன்றும் புரியாமல் பார்த்தேன். மறுபடியும் அழைத்த குரலில் பதற்றம் தெரிந்ததால் அவர்களை நோக்கி ஓடினேன். அருகே சென்றதும், 'திரும்பி பார்...' என்றனர். நான் அமர்ந்திருந்த பகுதியில் பாம்பு ஊர்ந்து சென்றது கண்டு அதிர்ந்தேன்.
ஆசுவாசம் தந்து, 'பாம்பு வருவதாக கூறி இருந்தால், நிதானம் இழந்து பயத்தில் அதை மிதித்திருப்பாய். அது, உன்னை தீண்ட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் தான் ஜாக்கிரதையாக அழைத்தோம்...' என்றார். பின், அந்த பாம்பை பிடித்து காட்டில் விட்டது பள்ளி நிர்வாகம்.
என் வயது, 30; ஆசிரியையாக பணிபுரிகிறேன். பதற்றம் இன்றி செயல்பட வேண்டும் என்பதை அந்த நிகழ்வில் கற்றுக்கொண்டேன். சமயோசிதமாக செயல்பட்டு என்னை காப்பாற்றிய ஆசிரியைகளுக்கு நன்றி சமர்ப்பிக்கிறேன்.
-- ஆர்.அன்ஜனா ரமேஷ், சென்னை.