PUBLISHED ON : ஏப் 06, 2024

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 1994ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
தமிழாசிரியர் கருணாகரன் அன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு, தனித்திறன் போட்டி அறிவிப்பு பற்றிய சுற்றறிக்கை வந்தது. அதை வாசித்து, 'போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் பெயரை பதிவு செய்யலாம்...' என்றார்.யாரும், முன் வரவில்லை. அனைவரும் அமைதி காத்தனர்.
இதை பார்த்ததும், 'பாடங்களை படிப்பதுடன் வாழ்வு நிறைவு பெற்று விடாது. உங்களுக்குள் தனித்திறன்கள் இருக்கும்; அது தான், எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும். அதனால், போட்டிகளில் பங்கேற்று, திறனை வெளிப்படுத்துங்கள். அதற்கு ஏதுவாக பயிற்சிகளில் ஈடுபடுங்கள்...' என்றார்.
ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்த அந்த அறிவுரை, மனதில் நம்பிக்கையை கிளறி விட்டது. கட்டுரை போட்டியில் பங்கேற்று, 2ம் பரிசு பெற்றேன். பின், ஒவ்வொரு ஆண்டும் அதை வழக்கமாக்கினேன்; வென்ற பரிசு கேடயங்களை பத்திரப்படுத்தி உள்ளேன்.தற்போது, என் வயது, 43; பத்திரிகைகளுக்கு, கதை, கவிதை மற்றும் துணுக்குகள் எழுதி வருகிறேன். எனக்குள் மறைந்திருந்த திறன்கள் வளர, அந்த தமிழாசிரியர் போட்டார் விதை. நன்றி என்ற நீர் ஊற்றி அதை நாளும் வளர்த்து வருகிறேன்.
- எம்.மகாலிங்கம், திருப்பூர்.