Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/தீபாவளி மலர்/ஒரு காதல் வந்திருக்கு: மத்தாப்பாய் பூரிக்கும் துஷாரா

ஒரு காதல் வந்திருக்கு: மத்தாப்பாய் பூரிக்கும் துஷாரா

ஒரு காதல் வந்திருக்கு: மத்தாப்பாய் பூரிக்கும் துஷாரா

ஒரு காதல் வந்திருக்கு: மத்தாப்பாய் பூரிக்கும் துஷாரா

PUBLISHED ON : அக் 31, 2024


Google News
Latest Tamil News
சினிமா பரம்பரை இல்லை... ஆனாலும் 'சார்பட்டா பரம்பரை'யில் மாரியம்மாவாக 'யாருடா இந்த பொண்ணு' என புருவம் உயர வைத்தவர் திண்டுக்கல்லை சேர்ந்த நம்ம ஊரு பொண்ணு துஷாரா விஜயன். ஆரம்பத்திலேயே தனுஷ், ரஜினி, விக்ரம் படங்கள்... என டாப் கியரில் பயணிப்பவர் தினமலர், தீபாவளி ஸ்பெஷலுக்காக சரவெடியாய் அளித்த பேட்டி...

* 'வேட்டையன்' அனுபவம்?

'ராயன்' படப்பிடிப்பில் இருந்தபோது இயக்குனர் ஞானவேல் பேசினார். ரஜினி, அமிதாப் படம் என்றதும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். முதல்நாளே ரஜினி உடன் படப்பிடிப்பு. பயத்தில் காய்ச்சல் வந்தது. அவரிடம் என்னை அறிமுகம் செய்தேன். என்ன ஆச்சரியம்... 'சார்பட்டா பார்த்தேன். உங்க நடிப்பு பிரமாதம்' என்றார்.

* ரஜினியிடம் கற்றுக்கொண்ட விஷயம்?

இவ்வளவு உயரத்தில் இருந்தும் எளிமையான மனிதர். ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே. அவருக்கு மாற்று கிடையாது. எந்த உயரம் போனாலும் நம்ம கால் எப்போதும் தரையில் இருக்கணும் என்ற படிப்பினை கிடைத்தது தான் அவரிடம் கற்றுக்கொண்ட மிக முக்கிய விஷயம்.

* உங்களுக்கு அருமையான கேரக்டர், படங்கள் அமைவது எப்படி?

கதைகளையோ, கேரக்டர்களையோ நான் தேடிப்போவதில்லை, அதுவாக அமைகிறது. யாரிடமும் வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டதில்லை. வலுவான ரோல்களில் நடித்திருப்பதால் அப்பாவி வேடத்தில் நடிக்க ஆசை.

* தனுஷ், ரஜினி, விக்ரம்... இதை எப்படி பாக்குறீங்க?

மகிழ்ச்சியாக உள்ளது. விக்ரம் உடன் 'வீர தீர சூரன்' படத்தில் நடிக்கிறேன். செட்டில் நமக்கு வெறி வரும் அளவுக்கு நடிக்கிறார். ரஜினியை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளேன். தனுஷை பொருத்தமட்டில் டைம், ஸ்பீடு தான் முக்கியம்.

* எப்போ திருமணம்...

சினிமா தான் என் விருப்பம் என வீட்டில் புரிந்து கொண்டார்கள். திருமண பேச்சை இப்ப வரைக்கும் எடுக்கல.

* சினிமாவில் சந்தித்த சவால்?

'யார் என்ன சொன்னாலும் சொல்லுங்க, நான் என் வேலையை பார்க்கிறேன்' என்ற ரீதியில் செயல்படுபவள் நான். இங்கு பொறுமையாக இருப்பது தான் சவால். வெல்வேன் என்ற தன்னம்பிக்கை அவசியம். எமோஷனலா இருப்பவர்களுக்கு சினிமா 'செட்டாகாது'.

* திறமை போதுமா?

நான் மாடலிங்கில் இருந்து சினிமாவிற்கு வந்தேன். திறமை போதும், ஆனால் எதை செய்தாலும் அதன் மேல் காதலும், ஆர்வமும் வேண்டும்.

* நிறைய சம்பளம், நல்ல கதை, உங்க தேர்வு?

எனக்கான ரோலை தான் பார்ப்பேன். பணம் முக்கியம் அல்ல. சினிமாவை விட்டுட்டு வீட்டிற்கு போனால் மூணு வேளை சாப்பாடு போட்டு என் பெற்றோர் என்னை ராணி மாதிரி பார்த்துபாங்க.

* காதல் வந்து இருக்கா?

அப்பப்போ வரும், போகும். சமீபத்தில் கூட வந்திருக்கு.

* 'ட்ரீம்' ரோல்?

பிரியங்கா சோப்ரா வாழ்க்கை கதையில் நடிக்க ஆசை. அவர் வாழ்வில் நடந்ததை தெரிஞ்சுக்க விரும்புகிறேன்.

* தீபாவளி நினைவுகள்?

சின்ன வயசு தீபாவளியை மறக்க முடியாது. திண்டுக்கல்லில் உறவுகளோடு கொண்டாடுகிற சுகமே தனி. எப்ப தீபாவளி வரும்னு காத்திருந்த காலம் உண்டு. இப்போதும் அந்த தீபாவளி உற்சாகம் தீராமல் மனதில் உள்ளது. என்னைப்பொறுத்த வரையில் வெற்றியின் தீபாவளி இது. எங்கும் தீப ஒளி பரவ வாழ்த்துகிறேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us