Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் முத்துகள்

அறிவியல் முத்துகள்

அறிவியல் முத்துகள்

அறிவியல் முத்துகள்

PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
1. சீனாவில் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜெஹோலியா லாங்செங்கி (Jeholia longchengi) இனத்தைச் சேர்ந்த தேளின் தொல்லெச்சத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் முதன்மையான உணவாகப் பல்வேறு பூச்சிகள் இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த தேள் 10 செ.மீ. நீள உடல் உடையது.

2. அபியேசி குடும்பத்தைச் சேர்ந்த அரிய தாவர இனம் ஹைமெனிடியம் அமாபில் (Hymenidium amabile). இது அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. தற்போது இந்த இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் நூறாண்டுக்குப் பிறகு அருணாசலப் பிரதேசத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3. ஆஸ்திரேலியாவின் கேர்ட்டின் பல்கலையைச் சேர்ந்த புவியியலாளர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தைக் கண்டறிந்துள்ளனர். இது 347 கோடி ஆண்டுகள் பழமையானது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் பள்ளங்களிலே மிகப் பழையது இதுவே.

4. பூமியிலிருந்து 40 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பவை NGC 3561B, NGC 3561A ஆகிய கேலக்சிகள். இவை ஒன்றை ஒன்று ஈர்த்து, மெதுவாக ஒன்று கலந்து வருவதை ஹப்பிள் தொலைநோக்கி படம் எடுத்துள்ளது.

5. மலேசியா, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பறவையியல் வல்லுநர்கள் குழு இந்தோனேசியாவில் ஒரு புது பறவை இனத்தைக் கண்டறிந்துள்ளது. இதற்கு மைசோமெலா பாபரென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us