Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!


PUBLISHED ON : மார் 12, 2026 07:39 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2026 07:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சீன மின்வாகன தயாரிப்பாளரான 'பைட்' (BYD), உற்பத்தி செய்துள்ள அதிநவீன சொகுசு காரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கி.மீ., துாரம் வரை செல்கிறது. மூன்று மோட்டார்களையும், பிரமாண்ட பேட்டரியையும் கொண்ட இந்த கார், பந்தயக் காரின் வேகத்தையும், தொலைதுாரப் பயணத் திறனையும் ஒருசேர வழங்குகிறது.

Image 1547939


2. விரைவில் சூடாகும் லித்தியம்--அயான் பேட்டரிகளைக் குளிர்விக்க, பாலுாட்டிகளின் தோலைப் போன்ற ஒரு குளிர்விப்பு சவ்வை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். சவ்வின் நெகிழ்வான அடுக்குகள், காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, பேட்டரி சூடாகும் போது அதை நீராவியாக வெளியேற்றுகிறது. இது வெப்பத்தை 30 டிகிரி சென்டிகிரேடு வரை குறைக்கிறது.

Image 1547940


3. ஆல்பபெட் நிறுவனத்தின் 'தாரா' திட்டம், கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கற்றைகள் வாயிலாக 25 ஜி.பி.பி.எஸ். வேகத்தில் இணைய சேவையை வழங்கும் சிறிய கருவியை உருவாக்கியுள்ளது. கட்டடங்களுக்கு இடையே 10 கி.மீ., தூரம் வரை தரவுகளைப் பரிமாறும் இந்தக் கருவியை நிறுவ, கேபிள்களோ அல்லது அலைக்கற்றை உரிமங்களோ தேவையில்லை.

Image 1547941


4. சூரிய ஒளியை முழுமையாக உறிஞ்சும், 'பிளாஸ்மோனிக் சூப்ராபால்ஸ்' (Plasmonic Supraballs) எனும் தங்க நுண்துகள் கொத்துகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை புற ஊதா, ஒளி மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் ஆகிய ஒட்டுமொத்த சூரிய ஒளிக்கற்றையையும் ஈர்த்து, வெப்ப ஆற்றலாக மாற்றுகின்றன. சூரியசக்தி தொழில்நுட்பத்தில் இது ஒரு மைல்கல்.

Image 1547942


5. ஏறத்தாழ 51.8 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய முதுகெலும்புள்ள உயிரினங்களின் புதை படிவங்கள், அவற்றுக்கு நான்கு கண்கள் இருந்ததை காட்டுகின்றன. பக்கவாட்டில் ஒரு ஜோடி மற்றும் தலைக்கு மேல் ஒரு ஜோடி என இருந்த இந்தக் கண்கள், கடலில் எதிரிகளிடமிருந்து தப்பிக்க உதவியுள்ளன. தலைக்கு மேல் இருந்த கண்கள், பின்னாளில் நவீன உயிரினங்களின் 'பினியல் சுரப்பியாக' (Pineal gland) பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us