PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

1. அமெரிக் காவைச் சேர்ந்த கொலம்பியா பல்கலை ஆய்வாளர்கள் அட்லான்டிக் பெருங்கடலுக்குக் கீழே 2,792.68 கன கிலோமீட்டர் உப்பு இல்லாத நன்னீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். வருங்காலத்தில் உலகின் குடிநீர்த் தேவையை இது தீர்த்து வைக்கும் என்று கூறுகின்றனர்.
![]() |
2. 'வாடர் பியர்' என்பவை நீரில் வாழும் 8 கால்களை உடைய ஒரு வகை நுண்ணுயிரிகள். இவற்றில் புது இனத்தை மலேசியாவைச் சேர்ந்த யு.எம்.எஸ்., பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு 'பேடில்லிபெஸ் மலேசியனஸ்' என்று பெயரிட்டுள்ளனர்.
![]() |
3. கலிபோர்னியா மாகாணக் கடற்கரையில் 10,000 அடி ஆழத்தில் 'ஸ்னைல்ஃபிஷ்' இனத்தைச் சேர்ந்த ஒரு புதிய மீன் வகையைக் கண்டறிந் துள்ளனர். பிங்க் நிறத்தில் பெரிய மு கத்துடன் அழகிய கண்களுடன் இருக்கும் இந்த மீன், கார்ட்டூன் போன்று உள்ளது.
![]() |
4. இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் 1899ம் ஆண்டு ஒரு டைனோசர் தொல்லெச்சம் கிடைத்து. அதை மறு ஆய்வுக்கு உட்படுத்திய ஆய்வாளர்கள் 125 ஆண்டுகள் கழித்துத் தற்போது, இந்த டைனோசருக்கு விஞ்ஞானி ஐசக் நியூட்டனின் பெயரால் 'நியூட்டன் சரஸ் காம்ப்ரென்சிஸ்' என்று பெயர் வைத்துள்ளனர்.
![]() |
5. ஆஸ்திரேலிய கண்டத்தில் மட்டுமே வாழக் கூடியவை 'நைட் பேரட்' எனும் அழகிய பறவைகள். கடந்த 100 ஆண்டுகளாக இவற்றை யாரும் பார்த்ததாக பதிவு செய்யவில்லை. எனவே இவை அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டன. இந்த நிலையில், 50 கிளிகள் மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.