PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM

1. நம் சூரியக் குடும்பத்தில் நெப்டியூன் கோளைத் தாண்டி நீண்ட தொலைவில் இருக்கும் ஒரு கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2017 OF201 என்று பெயரிடப்பட்டுள்ள இது 700 கிலோ மீட்டர் விட்டம் உடையது. நம் சூரியனை ஒருமுறை சுற்றி வர இது 25,000 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.
![]() |
2. பூமியில் இருந்து 1,100 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இரண்டு கேலக்ஸிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கலப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை நொடிக்கு 500 கி.மீ., வேகத்தில் ஒன்றை நோக்கி ஒன்று நகர்கின்றன.
![]() |
3. புற்றுநோய்க்கான இரண்டு முக்கிய மருந்துகள் ட்ராமெடனிப், ராபாமைசின். இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்ட புதிய மருந்தை எலிகள் மீது விஞ்ஞானிகள் சோதித்துப் பார்த்தனர். எலிகளின் ஆயுள் 30 சதவீதம் அதிகரித்தது. மனிதர்களுக்கு இது உதவுமா என்ற கோணத்தில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
![]() |
4. புவி வெப்பமயமாதலால் இமய மலைத்தொடரின் ஒரு பகுதியான 'ஹிந்து குஷ்' மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாகச் சூழலியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த வேகத்தில் உருகினால் இந்த, நுாற்றாண்டின் இறுதிக்குள் 75 சதவீத பனிப்பாறைகள் உருகிவிடும். இது ஆசியாவில் வாழும் 100 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும்.
![]() |
5. பூமியில் இருந்து 155 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரம் HD 181327. இதைச் சுற்றி உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.