Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
01. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேர்ட்டின் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் பூமியில் நல்ல தண்ணீர் (உப்பற்ற நீர்) 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்டது தெரியவந்துள்ளது. உலகின் மிகப் பழைய தாதுவான ஜிர்கானை ஆய்வு செய்து, இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

02. ஜெம்பர்லி எனும் புது மருந்தை 42 நோயாளிகளுக்குத் தொடர்ந்து கொடுத்ததில் அவர்களுக்கு இருந்த மலக்குடல் புற்றுநோய் சரியானது. மற்ற புற்றுநோய்களின் சிகிச்சைக்கும் இது பயன்படுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

03. நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானங்கள் மிக உயரமாகப் பறக்கின்றன. இதனால், பயணியரின் உடலில் ஆக்சிஜன் குறைகிறது. அத்தகைய சூழலில் விமானத்தில் தரப்படும் மதுவை அருந்துவது, இதய பிரச்னைக்கு வழிவகுக்கும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஆர்.டபிள்யூ.டி.எச்., பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

04. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், தனிமையும் ஒருவகையில் இதய நோய்களுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. நண்பர், உறவினர்களுடன் நேரம் செலவழிப்பது இதயநோய் வரும் வாய்ப்பை 30 சதவீதம் வரை குறைக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

05. பிளாஸ்டிக் பொருட்களை மக்க வைக்கும் தன்மை புதுவகை கடல் பூஞ்சைக்கு உள்ளதை, நெதர்லாந்து கடல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பேரென்ஜியோடோன்டியம் ஆல்பம் என்ற பெயருடைய இது, முதன்முதலில் 2019 டிசம்பரில் வட பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us