PUBLISHED ON : ஜூலை 11, 2024 12:00 AM

01. செவ்வாய் கிரகத்தில் ஒவ்வோர் ஆண்டும் 180 முதல் 260 விண்கற்கள் விழுவதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா அனுப்பிய இன்ஸைட் லாண்டர் விண்கலம் ஏற்கனவே எடுத்த செவ்வாயின் படங்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இது தெரியவந்துள்ளது.
![]() |
02. ஆஸ்துமா நோயாளிகளுக்குப் பரவலாகக் கொடுக்கப்படும் ரோப்ளுமிலாஸ்ட் எனும் மருந்து, துாக்கமின்மையால் ஏற்படும் ஞாபகமறதிக்குப் பயன்படுத்தலாம் என ஆஸ்திரியா நாட்டின் ஃபென்ஸ் எனும் நரம்பியல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளது.
![]() |
03. சீனா அனுப்பிய சாங்கே விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி அங்கிருந்த நிலவின் மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு பூமிக்குத் திரும்பி உள்ளது. நிலவின் மற்ற பகுதி களுக்கும் தென் துருவத்திற்கும் உள்ள வேறுபாட்டை மண் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் அறியலாம்.
![]() |
04. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் சைக்கிள் விபத்தைத் தடுக்கும் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளார். இதை சைக்கிளின் பின் பகுதியில் பொருத்திவிட்டால் போதும், பின்னால் வரும் வாகனம் எது, எந்த வேகத்தில் வருகிறது என்பதை உணர்ந்து சைக்கிள் ஓட்டுபவரை எச்சரித்துவிடும்.
![]() |
05. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வியாழனை ஆராய்வதற்காக அனுப்பிய விண்கலம் ஜூனோ. இது தற்போது வியாழனின் துணைக்கோளான ஐஓவின் படங்களை அனுப்பியுள்ளது. இதிலிருந்து அங்கு எரிமலை குழம்புகள் ஆறு போல் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.