/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/உடல் பருமன் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்புஉடல் பருமன் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு
உடல் பருமன் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு
உடல் பருமன் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு
உடல் பருமன் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு
PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமான ஒன்று உடல் பருமன். விஞ்ஞானிகள் இதற்கு எளிய தீர்வை உருவாக்க ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தத் திசையில் அமெரிக்க நியூயார்க் பல்கலை ஆய்வாளர்கள் ஒரு முக்கிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். நாம் உண்ணும் உணவில் பலவிதமான அமினோ அமிலங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது 'சிஸ்டைன்.'
விஞ்ஞானிகள் 'சிஸ்டைன்' இல்லாத உணவை, தொடர்ந்து எலிகளுக்குக் கொடுத்து வந்தனர். அத்துடன் எலிகளின் உடலில் 'சிஸ்டைன்' உற்பத்தியாகாதபடிக்கு அவற்றை மரபணு மாற்றமும் செய்தார்கள். 7 நாட்களில் எலிகள் உடல் பருமன் 30 சதவீதம் குறைந்தது.
இந்த 'சிஸ்டைன்' முடக்கப்பட்டதால், எலி உடலில் உள்ள செல்களால் மாவுச்சத்தில் இருந்து ஆற்றலைப் பிரித்தெடுக்க முடியவில்லை. இதனால், ஏற்கனவே உடலில் சேர்த்து வைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பிலிருந்து ஆற்றலைப் பெற்றன. இதனால் எலிகளின் உடலில் கொழுப்பு கரைந்து, எடை குறைந்தது.
மனித உடலில் இந்த சோதனை மேற்கொள்வது எளிதானதல்ல. ஏனென்றால் 'சிஸ்டைன்' நம்முடைய உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது. இதன் அளவைக் குறைப்பது ஆபத்தை விளைவிக்கும். அதேபோல நாம் உண்ணும் எல்லாவிதமான உணவுகளிலும் 'சிஸ்டைன்' இருக்கிறது.
'சிஸ்டைன்' இல்லாத உணவை உருவாக்குவதற்கு செலவு பிடிக்கும், தினமும் உண்பது எளிதல்ல.
மேற்கண்ட சிக்கல்கள் இருந்தாலும், இந்த ஆய்வு உடல் எடையைக் குறைப்பதற்கான சிகிச்சையில் ஒரு புதிய வழியைக் காட்டி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.