Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/ சொரியாசிஸ் நோயை கட்டுப்படுத்தும் உணவு

சொரியாசிஸ் நோயை கட்டுப்படுத்தும் உணவு

சொரியாசிஸ் நோயை கட்டுப்படுத்தும் உணவு

சொரியாசிஸ் நோயை கட்டுப்படுத்தும் உணவு

PUBLISHED ON : அக் 09, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
சில நோய்கள் இன்றைய தேதி வரை குணப்படுத்த இயலாதவையாக உள்ளன. ஆனால், இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அப்படியான ஒன்று தான் சொரியாசிஸ். உலகம் முழுக்க 12.5 கோடி மக்கள் சொரியாசிஸ் நோயால் அவதிப்படுகின்றனர்.

இதைக் கட்டுப்படுத்த எந்த வகையான உணவு முறை உதவும் என்று விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வந்தனர்.

ஸ்பெயின் நாட்டின் ரமோன் ஒய் கஜல் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மத்திய தரைக்கடல் உணவு முறை வாயிலாக இந்த நோயை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கண்டறிந்திருக்கின்றனர்.

மத்திய தரைக்கடல் உணவு முறை என்பது பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், மற்றும் மீன் போன்றவற்றை முதன்மையாக உள்ளடக்கிய தாவர அடிப்படையிலான உணவு முறையாகும்.

இதில், பல்வேறு சத்துக்கள் உள்ளன, பலவித மான நோய்கள் வராமல் தடுக்கின்ற ஆற்றலும் உடையது. அதற்கு காரணம், இந்த உணவு முறையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பாலி பீனால் முதலிய சத்துக்கள் இருப்பது தான். இவை தோலில் ஏற்படும் அழற்சியை கட்டுக்குள் வைத்திருக்கும்.

இந்த ஆய்வுக்கு மிதமான முதல் நடுத்தர சொரியாசிஸ் பாதிப்பு உள்ள 38 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் சராசரி வயது 46. இவர்களுக்கு 18 வாரம் தொடர்ந்து மத்திய தரைக்கடல் உணவுகளைக் கொடுத்தனர்.

பிறகு அவர்கள் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்தனர். அதில் பல பேருக்கு நல்ல முன்னேற்றம் இருந்தது.

சொரியாசிஸ் நோய் தாக்கம் குறைந்திருந்தது, அதேபோல இவர்களா ல் நன்றாக துாங்கவும் முடிந்தது.

இந்த ஆய்வின் வாயிலாக, சொரியாசிஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு அவர்கள் சாப் பிடுகின்ற மருந்துடன் சேர்த்து மத்திய தரைக்கடல் உணவு முறையை மேற்கொண்டால் நோயின் பாதிப்பு குறையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us