PUBLISHED ON : ஜூலை 30, 2024 12:00 AM
அனைவருக்கும் இருக்கும் ஒரே உறவு 'நண்பர்கள்'.
உறவுகள் அதுவாக அமையும். நண்பர்கள் நாம் தேர்வு செய்வது. அனைவரது வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல வேறுபாடுகளை கடந்தது நட்பு . சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட நண்பர்களை அதிகம் சேர்ப்பது முக்கியம். ஒவ்வொரு சூழலிலும் புதிய நண்பர்கள் உருவாவது இயல்பு. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது அவசியம். நண்பர்கள் தினம் பல நாடுகளில், பல்வேறு தேதிகளில் கடைபிடிக்கப் படுகிறது. ஐ.நா., சார்பில் ஜூலை 30ல் உலக நண்பர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.