PUBLISHED ON : ஏப் 17, 2026 11:06 PM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
உலக ஹீமோபிலியா தினம்
சிறு காயம் ஏற்பட்டாலும் தொடர்ந்து ரத்தம் வருவது 'ஹீமோபிலியா'. இவர்களுக்கு காயம் ஏற்பட்டால் ரத்தம் உறையாமல் வழிந்து கொண்டே இருக்கும். இப்பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1989 முதல் ஏப். 17ல் உலக ஹீமோபிலியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நோய் கண்டறிதல்: சிகிச்சைக்கான முதல் படி' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை, நடுத்தர நாடுகளில் இப்பிரச்னைக்கு சிகிச்சை வசதிகள் மிக குறைவாக உள்ளன.





