PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

தகவல் சுரங்கம்
உலக உணவு தினம்
சத்தான, பாதுகாப்பான உணவு அனைவருக்கும் கிடைக்க வலியுறுத்தி ஐ.நா.,வின் உணவு, விவசாய அமைப்பு சார்பில் அக்.,16ல் உலக உணவு தினம் கடைபிடிக்கப் படுகிறது. பட்டினியால் அவதிப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதே இதன் நோக்கம். அனைவருக்கும் உணவு என்பது மனித உரிமையாக கருதப்படுகிறது. உலகில் 69 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவை வீணாக்காமல் தேவைப்படுவோருக்கு வழங்குவதே சிறந்த பணி. 'சிறந்த உணவு, சிறந்த எதிர்காலத்துக்காக கைகோர்த்து செல்லுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


