PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM

அசைவத்துக்கு தடை விதித்த நகரம்
காய்கறி, தானியங்கள் அடங்கிய சைவ உணவை பின்பற்றுவோர் அதிகமுள்ள நாடு இந்தியா. அதே போல அசைவம் சாப்பிடுவோரும் அதிகளவில் உள்ளனர். குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்திலுள்ள பாலிதானா, அசைவ உணவுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரம் என அழைக்கப்படுகிறது. இது ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. 2014ல் ஜெயின் சமூகத்தினர் 200 பேர், அசைவ உணவை தடை செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதையடுத்து அனைத்து வித இறைச்சி கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.