PUBLISHED ON : மே 13, 2025 12:00 AM

'ரெட் அலர்ட்' சொல்வது என்ன
மழைக்காலத்தில் 'ரெட் அலர்ட்' விடுத்தால், 24 மணி நேரத்தில் 205 மி.மீ., அளவு மழைக்கு வாய்ப்புள்ளது என அர்த்தம். இதுவே போர் நடைபெறும்போது, சில பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்படுவது வழக்கம். இச்சமயத்தில் எதிரிகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. மக்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். கடைகளை மூட வேண்டும். பொதுப்போக்கு வரத்து நிறுத்தப்பட வேண்டும். பாதுகாப்பை அதிகப்
படுத்த வேண்டும். மருத்துவமனை, தீயணைப்பு துறை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.