Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ சிபாரிசு இருந்தால் தான் போலீஸ் சிறப்பு பிரிவில் பணி!

சிபாரிசு இருந்தால் தான் போலீஸ் சிறப்பு பிரிவில் பணி!

சிபாரிசு இருந்தால் தான் போலீஸ் சிறப்பு பிரிவில் பணி!

சிபாரிசு இருந்தால் தான் போலீஸ் சிறப்பு பிரிவில் பணி!

PUBLISHED ON : செப் 14, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
ந ண்பர்கள் மத்தியில் அமர்ந்தபடியே, ''தார்ப்பாய் போட்டு மூடி மரங்களை கடத்தறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''நீலகிரி மாவட்டத்தில், யூகலிப்டஸ் மரங்கள் வெட்டும் அனுமதிக்கான எண்களை வச்சு, மற்ற மரங்களையும் லோடு கணக்கில் வெட்டி கடத்தறா... நீலகிரியில், 12 டயர்கள் கொண்ட லாரிகள் வர்றதுக்கு கலெக்டர் தடை விதிச்சிருக்கார் ஓய்...

''ஆனாலும், இந்த லாரிகள்ல ராத்திரி நேரங்கள்ல ஈசியா மரங்களை கடத்திண்டு போறா... கடத்தல் கும்பலின், 'கவனிப்பு' காரணமா, எல்லையில் இருக்கற சோதனை சாவடிகள்ல இந்த லாரிகளை கண்டுக்க மாட்டேங்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''ஆளுங்கட்சியினர் பனிப்போர்ல அதிகாரியை பந்தாடிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''எந்த அதிகாரியை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''பெரம்பலுார் கலெக்டரா இருந்த அருண்ராஜை, சமீபத்துல சர்க்கரை துறை கூடுதல் இயக்குநரா சென்னைக்கு துாக்கி அடிச்சாங்க... காஞ்சிபுரம் சப் - கலெக்டரா இருந்த மிருணாளினியை பெரம்பலுார் கலெக்டரா நியமிச்சு, மறுநாளே, 'ஜாயின்' பண்ணவும் சொல்லிட்டாங்க பா...

''அருண்ராஜ் இருந்தப்ப, பொது மக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு, ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவி, தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்துறதுன்னு ஆர்வமா இருந்தாரு... அப்படி இருந்தும், பெரம்பலுாருக்கு வந்த, 63 நாட்கள்லயே அவரை பந்தாடிட்டாங்க பா...

''அருண்ராஜ் பெரம்பலுார் வந்ததுமே, குளுகுளு ஊரின் தி.மு.க., - எம்.பி.,யான, 'மாஜி' மத்திய அமைச்சரை மரியாதை நிமித்தமா பார்த்திருக்காரு... கட்சி நிர்வாகி களுடன் இருந்த, 'மாஜி'யோ, 'நான் சொல்லிதான் இந்த கலெக்டரை நியமிச்சிருக்காங்க... நம்மாட்கள் குவாரி டெண்டர் விஷயமா, இவர்கிட்ட போனா எல்லாத்தையும் செஞ்சு குடுப்பார்'னு பந்தாவா சொல்லி யிருக்காரு பா...

''இதை கட்சிக்காரர் ஒருத்தர், 'மாஜி'க்கு எதிர் கோஷ்டியான கோட்டை புள்ளியிடம் போட்டு குடுத்துட்டாரு... அவர் பேச வேண்டிய இடத்துல பேசி, அருண்ராஜை சென்னைக்கு துாக்கி அடிச்சுட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.

''ஆட்டத்துல சேர்த்துக்க மாட்டேங்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''என்ன விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''உணவு பொருள் கடத்தல் தடுப்பு, சிலை கடத்தல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவு கள்ல பணிபுரிய, போலீசார் விண்ணப்பம் குடுத்தாலும், அதை முறையா பரிசீலனை பண்ண மாட்டேங்காவ... யார் மீதும் துறை ரீதியான நடவடிக்கை ஏதும் நிலுவையில் இருந்தா மட்டுமே, அவங்களை எந்த தனிப்பிரிவுக்கும் அனுப்ப கூடாதுன்னு விதி இருக்கு வே...

''ஆனா, எந்த புகாரும் இல்லாதவங்களையும் சிறப்பு பிரிவுகள்ல சேர்க்க மாட்டேங்காவ... ஆளுங்கட்சியினர் மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பரிந்துரை இருந்தா மட்டுமே, சிறப்பு பிரிவுகள்ல நியமனம் பண்ணுதாவ வே...

''அதுக்கும், 'கட்டிங்' வெட்டணுமாம்... சிறப்பு பிரிவுகள்ல வேலை பளு குறைவாகவும், 'வரும்படி' அதிகமாகவும் இருக்கிறது தான் இதுக்கு காரணம்னு சொல்லுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

பெஞ்சில் புதியவர்கள் சிலர் அமர, பெரியவர்கள் எழுந்த னர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us