கோவில் உண்டியல் திருடிய இருவர் கைது
கோவில் உண்டியல் திருடிய இருவர் கைது
கோவில் உண்டியல் திருடிய இருவர் கைது
PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM
ஆவடி, ஆவடி அடுத்த பருத்திப்பட்டு, சாந்தி கார்டனில் ஸ்ரீவாரி ஸ்ரீனிவாச வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், சுந்தர்ராஜ் அய்யர் கோவிலை திறக்க சென்றபோது, கோவிலின் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, 1,900 ரூபாயுடன் இருந்த சிறிய சில்வர் உண்டியல், 1,800 மதிப்பு உடைய பித்தளை அண்டா திருடு போனது தெரிந்தது.
இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆவடி, கோவர்த்தனகிரி, பாரதி நகரைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், 22, திருவேற்காடு, காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார், 21, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 350 ரூபாய், பித்தளை அண்டா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.