வரதர் கோவிலில் தீர்த்தவாரி உத்சவம்
வரதர் கோவிலில் தீர்த்தவாரி உத்சவம்
வரதர் கோவிலில் தீர்த்தவாரி உத்சவம்
PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM
பூந்தமல்லி,
பூந்தமல்லியில் பழமை வாய்ந்த திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, வைகாசி மாத பிரம்மோத்சவ விழா, கடந்த 11ம் தேதி துவங்கியது.
சேஷ வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட சேவை முடிந்துள்ள நிலையில், முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உத்சவம், நேற்று நடந்தது.
இதில், வரதராஜ பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார், கோவிலில் இருந்து திருக்குளத்தில் எழுந்தருளியதும், தீர்த்தவாரி உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.