/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ நிழல் பிரமுகரை விரட்டி அடித்த , ' மாண்புமிகு! ' நிழல் பிரமுகரை விரட்டி அடித்த , ' மாண்புமிகு! '
நிழல் பிரமுகரை விரட்டி அடித்த , ' மாண்புமிகு! '
நிழல் பிரமுகரை விரட்டி அடித்த , ' மாண்புமிகு! '
நிழல் பிரமுகரை விரட்டி அடித்த , ' மாண்புமிகு! '
PUBLISHED ON : செப் 22, 2025 12:00 AM

பி ல்டர் காபியை ருசித்தபடியே, ''எங்களுக்கு விடிவு காலம் பிறக்காதான்னு புலம்பறா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கிராமப்புறங்கள்ல சுகாதார அலுவலர்களா பணிபுரியும், 'ஆஷா' பெண் ஊழியர்களுக்கு மாசம், 5,500 ரூபாய் தான் சம்பளம்... மலை மாவட்டமான நீலகிரியில், இவங்களை, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் பணிகளுக்கும் அழைக்கறா ஓய்...
''ஆனா, முகாம் நடக்கற இடத்துக்கு வந்து போறதுக்கு பயணப்படியோ, உணவுப் படியோ தர்றது இல்ல... சமீபத்தில், குன்னுார், கேத்தியில் நடந்த முகாமில், இந்த பெண் ஊழியர்களை, டேபிள், பெஞ்சுகளை சுமக்க வச்சிருக்கா ஓய்...
''சில இடங்கள்ல நடக்கற முகாம்கள்ல இவாளுக்கு சாப்பாடு கூட ஏற்பாடு பண்ணாம பட்டினி போட்டிருக்கா... இதனால, 'எங்க வாழ்க்கைக்கு எப்ப தான் விடிவு வருமோ'ன்னு இவா எல்லாம் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மேடையில இடம் குடுத்துட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி
''யாருக்கு வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தி.மு.க.,வின் பொதுக்குழு, செயற்குழு, உயர்நிலை குழு கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள்ல, கட்சியின் மாநில நிர்வாகிகள் மட்டுமே, தலைவரான ஸ்டாலின் அருகில் அமர முடியும்... அணிகளின் மாநில நிர்வாகிகள் எல்லாம், மேடைக்கு கீழ் முன்வரிசையில் தான் அமர வைக்கப்படுவாங்க...
''தி.மு.க., இளைஞரணி செயலரான உதயநிதியும், கட்சி நிகழ்ச்சிகள்ல கீழே தான் அமர்ந்துட்டு இருந்தாரு... சமீபத்துல, கரூர்ல நடந்த, தி.மு.க., முப்பெரும் விழாவுக்கு முன்னாடியே, 'துணை முதல்வர் என்ற அந்தஸ்துல இருக்கிற உதயநிதியை மேடை யில அமர வைக்கணும்'னு, அவரது ஆதரவாளர்கள் பலரும் தலைமைக்கு கடிதங்கள் அனுப்பியிருக்காங்க...
''அவங்க விரும்பிய மாதிரியே, கரூர் முப்பெரும் விழா மேடையில, முதல் முறையா உதயநிதிக்கு இடம் குடுத்துட்டாங்க... இனி, எல்லா கட்சி நிகழ்ச்சிகளிலும் மேடையில உதயநிதியும் இருப்பாருங்க...'' என் றார், அந்தோணிசாமி.
''முக்கிய புள்ளி வீட்டுல நடந்த தகராறை கேளுங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தென் கடலோர மாவட்டத்தை சேர்ந்த, 'மாண்புமிகு' புள்ளியின் நிழல் மாதிரி, அவரது உறவினர் ஒருத்தர் இருந்தாரு... தி.மு.க.,வில் ஒரு அணியின் மாநில பொறுப்புலயும் இருக்காரு வே...
''முக்கிய புள்ளியின் தொழில் விவகாரங்களை இவர் தான் பார்த்துட்டு வந்தாரு... இந்த சூழல்ல, முக்கிய புள்ளி சமீப காலமா இவரை புறக்கணிச்சிட்டு, வேற ரெண்டு பேருடன் சேர்ந்து தொழில் ரீதியான முடிவுகளை எடுத்திருக்காரு வே...
''இதனால, விரக்தியில இருந்த நிழல் பிரமுகர், சமீபத்துல முக்கிய புள்ளி யிடம் பொங்கி எழுந்துட்டாரு... ரெண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் நடந்து, நிழல் பிரமுகர், 'நான் இல்லன்னா, நீ இந்த அளவுக்கு வந்திருப்பியா'ன்னு ஒருமையில திட்டியிருக்காரு வே...
' 'பதிலுக்கு முக்கிய புள்ளியும் எகிற, ரெண்டு பேரும் கெட்ட வார்த்தை கள்லயே திட்டிக்கிட்டாவ... பக்கத்துல இருந்த தம்ளரை துாக்கி, நிழல் பிரமுகர் மேல வீசிய முக்கிய புள்ளி, 'என் மூஞ்சியிலே முழிக்காதே'ன்னு சொல்லி விரட்டி, அடிச்சிட்டாரு... அடுத்து, அவரது கட்சி பதவியை பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்காரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.