/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/காந்தி மண்டபம் சந்திப்பில் நெரிசலை குறைக்க நடவடிக்கைகாந்தி மண்டபம் சந்திப்பில் நெரிசலை குறைக்க நடவடிக்கை
காந்தி மண்டபம் சந்திப்பில் நெரிசலை குறைக்க நடவடிக்கை
காந்தி மண்டபம் சந்திப்பில் நெரிசலை குறைக்க நடவடிக்கை
காந்தி மண்டபம் சந்திப்பில் நெரிசலை குறைக்க நடவடிக்கை
PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM

சென்னை, காந்தி மண்டபம் சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, நாளை முதல் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து, காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
* ராஜ்பவனில் இருந்து சர்தார் பட்டேல் சாலை வழியாக, மத்திய கைலாஷ் நோக்கி வரும் அரசு மாநகர பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும், காந்தி மண்டபம் மேம்பாலத்தில் மட்டுமே செல்ல வேண்டும்
* காந்தி மண்டபம் சர்வீஸ் சாலை வழியாக, மத்திய கைலாஷ் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கோட்டூர்புரம் செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்
* இந்த மாற்றுப்பாதைகளை ஏற்படுத்த, சி.எல்.ஆர்.ஐ., பேருந்து நிறுத்தம், ஏற்கனவே உள்ள இடத்திலிருந்து, அடையாறு நோக்கி சற்று முன்னோக்கி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.