Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : செப் 06, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் ஆனந்த் அறிக்கை: வரும், 2026 சட்டசபை தேர்தலில், ஆட்சி மாற்றத்திற்கான முதன்மை சக்தியாக ஒட்டு மொத்த தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை, த.வெ.க., பெற்று வருவதை மடைமாற்றம் செய்யும் நோக்கில், புதுச்சேரியில் த.வெ.க., கூட்டணி என, உண்மைக்கு புறம்பான தகவல் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறானது. த.வெ.க., புதுச்சேரியில் யாருடனும் கூட்டணி பேசவில்லை. புதுச்சேரி தேர்தல் நிலைப்பாட்டிலும், தலைவர் விஜயின் முடிவே இறுதியானது. புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த், அங்கயும் தனித்து போட்டியிட்டு, முதல்வராகிடலாம்கிற கனவுல இருக்காரோ?

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: கரூர் மாவட்டம், மருதுார் மற்றும் திருச்சி மாவட்டம், உமையாள் புரம் இடையே காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பது, டெல்டா விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கை. நிதி பற்றாக்குறையால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில், கரூரில் முப்பெரும் விழாவை, வரும் 17ம் தேதி தி.மு.க., நடத்துகிறது. வஞ்சிக்கப்பட்டுள்ள விவசாயிகள், இந்த விழாவை நடத்த அனுமதிக்கலாமா?

தி.மு.க.,வுக்கு எதிராக விவசாயிகளை துாண்டி விட்டதாக, இவர் மேல வழக்கு போட்டுட போறாங்க!

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: எல்லை தாண்டி வந்ததாக, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதும் கடும் கண்டனத்துக்கு ரியது. இலங்கை அரசின் அடாவடித்தனத்தை, மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது, மீனவ சமூகத்தை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. இலங்கை அரசின் இத்தகைய மீனவர்கள் விரோத செயல்களுக்கு, மத்திய அரசு மு ற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கடலில் எல்லையை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம்... வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் பிரதமர் மோடி, இலங்கை அரசையும் கொஞ்சம் தட்டி வைக்கணும்!

மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் பேட்டி: 'கட்டாய கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வரும் முன் ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் மிக கடுமையான முறையில் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு, அனைத்து ஆசிரியர்களையும் நிலைகுலைய வைத்துள்ளது.

ஆசிரியர்களை விட, அவங்களை ஓட்டு வங்கியாக கருதும் இவரை போன்ற தல ை வர்கள் தான் ரொம்பவே நிலைகுலைந்து போயிருக்காங்க!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us