Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ செல்லரித்த ராஜூ காசி முத்துமாணிக்கம் கடும் விமர்சனம்

செல்லரித்த ராஜூ காசி முத்துமாணிக்கம் கடும் விமர்சனம்

செல்லரித்த ராஜூ காசி முத்துமாணிக்கம் கடும் விமர்சனம்

செல்லரித்த ராஜூ காசி முத்துமாணிக்கம் கடும் விமர்சனம்

PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM


Google News
சென்னை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவின் பேச்சுக்கு தி.மு.க., வர்த்தக அணி செயலர் காசி முத்துமாணிக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்,

காசி முத்துமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை:

ஜெயலலிதா அரசியலுக்கு வரும் முன்பே, அ.தி.மு.க., மாவட்ட கழக செயலராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பின், ஜெயலலிதாவிற்கு துணையாக இருந்தவர். ஜெயலலிதாவால், அவர் உயரவில்லை. ஜெயலலிதாவை உயர்த்திவிட்டவர். ஆனால், ரகுபதி இல்லத் திருமணத்திற்கு வராமலும், பல சிக்கல்களை தந்ததால், ஜெயலலிதாவின் பாசம் போச்சு என்பதறிந்து கட்சியில் விலகியவர். பரம்பரை மிராசுதாரர் மகன். தன்னை அவமானப்படுத்திய ஜெயலலிதாவின் மறைவுக்கு மறைந்து போகாமல், நிமிர்ந்து நின்று அஞ்சலி செலுத்தியவர் ரகுபதி. இருக்கும் இடத்தில் விசுவாசமாக இருப்பவர் ரகுபதி.

'சின்னம்மா' நீங்கள் தான் எதிர்காலம் என, சசிகலா காலில் விழுந்து, பின், சசிகலா கணவரின் மறைவுக்கு அ.தி.மு.க.,விலிருந்த பழனிசாமி செல்லாமல் தடுத்தது நீங்கள்.

எனவே, நீங்கள் 'தெர்மாகோல் கொண்டு ராணுவ எல்லை வீரர்களுக்கு குளிரூட்டுங்கள்' என, ரகுபதியை விமர்சிக்கும் யோக்கியதை, உங்களுக்கில்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்..





      Our Apps Available On




      Dinamalar

      Follow us