/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ நடிகை யாஷிகா பேட்டி தடுத்து நிறுத்திய போலீசார் நடிகை யாஷிகா பேட்டி தடுத்து நிறுத்திய போலீசார்
நடிகை யாஷிகா பேட்டி தடுத்து நிறுத்திய போலீசார்
நடிகை யாஷிகா பேட்டி தடுத்து நிறுத்திய போலீசார்
நடிகை யாஷிகா பேட்டி தடுத்து நிறுத்திய போலீசார்
PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM
ஆலந்துார், அனுமதி பெறவில்லை எனக்கூறி, நடிகையின் பத்திரிகையாளர் சந்திப்பை, போலீசார் பாதியில் நிறுத்தினர்.
நடிகர் சந்தானம் நடிப்பில், கடந்த மாதம் வெளியான, 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம், ஓ.டி.டி.,யில் இந்த வாரம் வெளியானது.
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி, சென்னை கத்திப்பாராவில் உள்ள, அர்பன் ஸ்கொயரில் நேற்று நடந்தது. இதில், நடிகை யாஷிகா பங்கேற்றார்; பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, மைக் வைப்பது தொடர்பாக, 'யு -டியூபர்ஸ்' மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகும் நிலை ஏற்பட்டது.
போலீசார் அங்கு விரைந்தனர். முன் அனுமதி இன்றி நிகழ்ச்சி நடத்தியதற்காக, பத்திரிகையாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தினர். இதனால், நடிகை யாஷிகா இறுகிய முகத்துடன் புறப்பட்டார்.
***