/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பலா வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை பலா வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை
பலா வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை
பலா வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை
பலா வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை
PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM
சென்னை :கடலுார் மாவட்டம் பண்ருட்டியில், பலாப்பழம் அதிகளவில் விளைகிறது. ஆண்டுதோறும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, பலாப்பழ அறுவடை நடப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டு அறுவடை களைகட்டியுள்ளது.
இங்கிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு பலாப்பழம் வரத்து அதிகரித்து உள்ளது. புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது. தினசரி 50 லாரிகளில் பலாப்பழம் வருகிறது.
வரத்து அதிகரிப்பு காரணமாக, மொத்த விலையில் கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு பலாப்பழம் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பலாப்பழ பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.