/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ லாரி உரசியதில் மனைவி கண் முன் கணவர் பலி லாரி உரசியதில் மனைவி கண் முன் கணவர் பலி
லாரி உரசியதில் மனைவி கண் முன் கணவர் பலி
லாரி உரசியதில் மனைவி கண் முன் கணவர் பலி
லாரி உரசியதில் மனைவி கண் முன் கணவர் பலி
PUBLISHED ON : ஜூன் 07, 2025 12:00 AM
ஆவடி: திருநின்றவூர், வினோபா நகரைச் சேர்ந்தவர் நரேஷ்பாபு, 35; கட்டட ஒப்பந்ததாரர். இவரது மனைவி சாருமதி, 33, மகன் ஆஸ்மிகா, 2, உள்ளனர்.
'யமஹா எப் ஈசட்' இருசக்கர வாகனத்தில், மனைவி, மகளுடன், செங்குன்றத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று, நேற்று மதியம் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
ஆவடி, வீராபுரம் அருகே வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், முன்னால் சென்ற எய்சர் லாரி உரசியதில், நிலை தடுமாறி விழுந்ததில், லாரி டயரில் சிக்கி, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே நரேஷ்பாபு உயிரிழந்தார். சாருமதி, ஆஸ்மிகா, காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நரேஷ்பாபு உடல், பிரேத பரிசோதனைக்காக போரூர் எஸ்.ஆர்.எம்.சி., மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக நாமக்கல், ராசிபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுப்பிரமணி, 64, என்பவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.