PUBLISHED ON : ஜூன் 29, 2025 12:00 AM

கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, வனச் சுற்றுலாதலம், மன்னவனுார் சூழல் சுற்றுலா தலம் உள்ளிட்ட பகுதிகளை பயணிகள் ரசித்தனர்.
ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.