PUBLISHED ON : செப் 16, 2025 12:00 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், கஞ்சா கடத்தி வந்த நால்வரை, போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு நகர போலீசார் நேற்று முன்தினம் இரவு, செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரயில் நிலைய சாலையில் இருந்து வெளியே வந்த நால்வர், போலீசாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர்.
நால்வரையும் மடக்கிப் பிடித்த போலீசார் சோதனை செய்த போது, அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது.
இதையடுத்து, நால்வரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது, அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கதுரை, 22, இசக்கிமுத்து, 22, ராஜா, 18 மற்றும் முகமது ரஷிக், 22, என தெரிந்தது.
ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, செங்கல்பட்டு பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மேற்கண்ட நால்வரையும் கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.