/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தீ பிடித்து எரிந்த மதுரப்பாக்கம் காப்புக்காடு விடிய விடிய போராடிய தீயணைப்பு துறை தீ பிடித்து எரிந்த மதுரப்பாக்கம் காப்புக்காடு விடிய விடிய போராடிய தீயணைப்பு துறை
தீ பிடித்து எரிந்த மதுரப்பாக்கம் காப்புக்காடு விடிய விடிய போராடிய தீயணைப்பு துறை
தீ பிடித்து எரிந்த மதுரப்பாக்கம் காப்புக்காடு விடிய விடிய போராடிய தீயணைப்பு துறை
தீ பிடித்து எரிந்த மதுரப்பாக்கம் காப்புக்காடு விடிய விடிய போராடிய தீயணைப்பு துறை
PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

சேலையூர், சேலையூரை அடுத்த மதுரப்பாக்கத்தில், 446 ஏக்கர் பரப்பளவு கொண்ட காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக்காட்டில், மயில், முள்ளம்பன்றி, கீரி, உடும்பு, மலைப்பாம்பு ஆகிய வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, காய்ந்த நிலையில் இருந்த செடி, கொடிகள் தீ பிடித்து எரிந்தன.
சற்று நேரத்தில், இரண்டு கிலோ மீட்டர் பரப்பளவுக்கு தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள், வனத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், தீ வேகமாக பரவியதால், தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர், விடிய விடிய போராடி தீயை அணைத்தனர்.
அங்குள்ள ஏரிக்கரையில் பற்றிய தீ, அப்படியே மெல்ல மெல்ல காப்புக்காட்டிற்கு பரவியுள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருவதால், காட்டில் உள்ள காய்ந்த செடி, கொடிகளை அகற்றினால் தான் புல் வரும் என்பதால், கால்நடைகளை மேய்ப்போர் தீ வைத்திருக்கலாம் என, வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அதே நேரத்தில், சமூக விரோதிகளின் கைவரிசையாக இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.