PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM
திருவாலங்காடு, மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றதாக, விவசாயி போலீசில் புகார் அளித்தார்.
திருவள்ளூர் பி.எஸ்.என்.நகர் பகுதியில் வசிப்பவர் சேகர், 69; விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம், திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் - ஜாகீர்மங்கலம் செல்லும் பகுதியில் உள்ளது.
இந்த நிலத்தில் விவசாய கிணறு அமைத்து, மின்மோட்டார் பொருத்தி பயிரிட்டு வந்தார். நேற்று காலை வழக்கம் போல், சேகர் நிலத்திற்கு சென்று பார்த்தபோது, மின்மோட்டார் மற்றும் மின்ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு 45,000 ரூபாய்.
இதுகுறித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.