PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM
அ நிறம் | அளவு
சென்னை, மெட்ரோ ரயில் பணிக்காக, கெல்லீஸ் பால் போர் சாலையில் குடிநீர் குழாய் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதனால், 3 மற்றும் 4ம் தேதி, கீழ்ப்பாக்கம் குடிநீர் பகிர்மான நிலையம் செயல்படாது.
இதன் காரணமாக, ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட, தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், பெரியமேடு, சவுகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லீஸ், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
அவசர தேவைக்கு, 044 -4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.





