/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஆசிரியர்கள் சஸ்பெண்ட் மாணவர்கள் போராட்டம் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் மாணவர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் சஸ்பெண்ட் மாணவர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் சஸ்பெண்ட் மாணவர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் சஸ்பெண்ட் மாணவர்கள் போராட்டம்
PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM
மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 வருடங்களாக பல்வேறு பிரச்னை நிலவியது. மாணவர்கள், பெற்றோர்கள்,தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கொடுத்து வந்ததை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புகாரின் அடிப்படையில் ஆசிரியர்கள் ராஜா, சாத்தையா இருவரையும் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். நேற்று அவர்களிடம் படித்த 30 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை பள்ளி முன் மழை பெய்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் கிருஷ்ணகுமார், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.