/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தெற்காசிய இலக்கு பந்து: தமிழக வீரர்கள் சாதனை தெற்காசிய இலக்கு பந்து: தமிழக வீரர்கள் சாதனை
தெற்காசிய இலக்கு பந்து: தமிழக வீரர்கள் சாதனை
தெற்காசிய இலக்கு பந்து: தமிழக வீரர்கள் சாதனை
தெற்காசிய இலக்கு பந்து: தமிழக வீரர்கள் சாதனை
PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM

சென்னை, தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான 'டார்கெட் பால்' எனும் இலக்கு பந்து போட்டி, நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பகுதியில் நடந்தது.
இதில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்றன. இருபாலருக்கான இப்போட்டி, 'லீக்' முறையில் நடந்தது.
அனைத்து போட்டி களின் முடிவில், ஆண்கள் அணியில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலிடத்தை பிடித்தது. நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாம் இடத்தையும், மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
அதேபோல, பெண்கள் பிரிவில் வங்கதேச அணி ஐந்து போட்டியும், நேபாள அணி நான்கு போட்டியும், இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றின.
இந்திய அணியில், தமிழகத்தில் இருந்து ஆண்கள் பிரிவில் அஜித், கணபதி, கிறிஸ்டோபர், ராகுல், பாலகிருஷ்ணன், பிரகாஷ், பரத் ஆகியோர் இடம் பெற்றனர். அதேபோல, பெண்கள் பிரிவில் ஷைலி ஷரோன் ரோஸ், திருஷ்டியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 'பெஸ்ட் டைமண்ட் பிளேயர்' பட்டத்தை தமிழக வீரர் அஜித்; பெண்களில் 'பெஸ்ட் ஷுட்டர்' பட்டத்தை ஷைலி ஷரோன் ரோஸ் ஆகியோர் பெற்றனர். இந்திய அணியில் பங்கேற்று, தமிழகத்திற்கு பெருமையை பெற்றுத் தந்த வீரர் - வீராங்கனையரை தமிழ்நாடு இலக்கு பந்து கழகத்தினர் பாராட்டினர்.