/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ புழல் நெடுஞ்சாலையில் மணலால் விபத்து அபாயம் புழல் நெடுஞ்சாலையில் மணலால் விபத்து அபாயம்
புழல் நெடுஞ்சாலையில் மணலால் விபத்து அபாயம்
புழல் நெடுஞ்சாலையில் மணலால் விபத்து அபாயம்
புழல் நெடுஞ்சாலையில் மணலால் விபத்து அபாயம்
PUBLISHED ON : ஜூலை 10, 2024 12:00 AM

புழல், செங்குன்றம் ---- புழல் ஜி.என்.டி. தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 2 அடி அகலத்திற்கு மணல் குவிந்துள்ளது. இதனால், அப்பகுதியில் பைக்கில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும், காற்றில் மணற்துகள் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களையும் பதம் பார்க்கிறது.
இந்த சாலையில் விளக்குகளும் முழுமையாக எரிவதில்லை. மாதவரம் ரவுண்டானா சந்திப்பு முதல் புழல் கேம்ப் வரையுள்ள பகுதியில் விளக்குகள் அடிக்கடி பழுதாகி, சாலை இருளில் மூழ்குகிறது.
புழல் ஏரி முதல் செங்குன்றம் - திருவள்ளூர் சாலை சந்திப்பு வரை உள்ள சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருப்பதுடன், தேவையற்ற மணலும் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு பணியை தேசிய நெடுஞ்சாலை துறை மேற்கொள்ள வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.