/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பாரத பிரதமர் 'விஸிஷ்ட் சேவா' விருது வழங்கி கவுரவித்தார்! பாரத பிரதமர் 'விஸிஷ்ட் சேவா' விருது வழங்கி கவுரவித்தார்!
பாரத பிரதமர் 'விஸிஷ்ட் சேவா' விருது வழங்கி கவுரவித்தார்!
பாரத பிரதமர் 'விஸிஷ்ட் சேவா' விருது வழங்கி கவுரவித்தார்!
பாரத பிரதமர் 'விஸிஷ்ட் சேவா' விருது வழங்கி கவுரவித்தார்!
PUBLISHED ON : ஜூலை 20, 2024 12:00 AM

இந்திய விமானப் படையின், பெண் ஏர் மார்ஷல் சாதனா சக்சேனா நாயர்: உரிய முயற்சியும், பயிற்சியும் இருந்தால், பெண்கள் எந்தத் துறையிலும் பிரகாசிக்கலாம்.
அதற்கு நான் வாழும் உதாரணம். இந்திய விமானப்படையில், 'பொது மருத்துவமனை சேவைகளின் இயக்குனர்' என்பது கவுரவமிக்க உயர் பதவியாகும்.
இவ்வளவு பெரிய பொறுப்பு வகிக்கும் முதல் பெண்மணி நான் தான். 'ஏர் மார்ஷல்' என்ற அந்தஸ்தை பெற்ற இரண்டாவது பெண்மணியும் நானே.
இதற்கு முன், பெங்களூரில் உள்ள, 'டிரெயினிங் கமாண்ட் ஆப் தி இண்டியன் ஏர் போர்ஸ்' அமைப்பில் முதன்மை மருத்துவ அதிகாரியாக பணியாற்றினேன்.
என் கணவர் கேபி நாயரும் ஏர் மார்ஷல் பதவியை வகித்தவர் தான். இந்திய விமானப்படையில் கணவன் - மனைவி இருவரும் ஏர் மாஷலாக இருக்கின்றனர் என்பதற்கு நாங்கள் தான் முதல் முன்னுதாரணம்!
இந்திய விமானப்படை மருத்துவரின் மகள் மற்றும் விமானப்படை மருத்துவரின் சகோதரி என்ற சிறப்பும் எனக்கு உண்டு. கடந்த 70 ஆண்டுகளாக மூன்று தலைமுறைகளாக இந்திய விமானப்படையில் பணிபுரிந்து வருகிறோம்.
புனேயில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லுாரியில் பட்டம் பெற்றேன். 1985 டிசம்பர் மாதம், இந்திய விமானப்படையில் சேர்ந்தேன்.
'குடும்ப மருத்துவம்' எனும் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, புது டில்லியில் இருக்கும் 'எய்ம்ஸ்' அமைப்பில் 'மெடிக்கல் இன்பர்மேடிக்ஸ்' துறையில் இரண்டாண்டு காலம் பயிற்சியும் பெற்றிருக்கிறேன்.
ரசாயனம், உயிரியல், கதிரியக்கவியல் மற்றும் அணுவியல் போர் முறைகள் தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளுடன் பயிற்சி பெற்றிருக்கிறேன். ராணுவ மருத்துவ நெறிமுறைகள் தொடர்பாக, ஸ்விட்சர்லாந்திலும் பயிற்சி பெற்றேன்.
இந்திய விமானப்படையின் வெஸ்டர்ன் ஏர் கமாண்ட் மற்றும் டிரெயினிங் கமாண்ட் பிரிவுகளின் முதல் முதன்மை மருத்துவ அலுவலரும் நான் தான். பாரதப் பிரதமர், 'விஸிஷ்ட் சேவா' பதக்கத்தை எனக்கு வழங்கி, கவுரவித்தார்.
என் சாதனைகளுக்கு குடும்ப பின்னணியும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.