/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ல் வளர்ந்துள்ள மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்ல் வளர்ந்துள்ள மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ல் வளர்ந்துள்ள மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ல் வளர்ந்துள்ள மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ல் வளர்ந்துள்ள மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM

காஞ்சிபுரம், மே 20-
காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு பள்ள தெருவில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் கால்வாயை, முறையாக பராமரிக்காததால், குப்பை குவிந்து, புல் வளர்ந்துள்ளதால், கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியை சூழும் நிலை உள்ளது.
எனவே, பள்ள தெருவில் உள்ள கால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.