Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ வனத்துறையில் வகை, தொகையின்றி நடக்கும் வசூல்!

வனத்துறையில் வகை, தொகையின்றி நடக்கும் வசூல்!

வனத்துறையில் வகை, தொகையின்றி நடக்கும் வசூல்!

வனத்துறையில் வகை, தொகையின்றி நடக்கும் வசூல்!

PUBLISHED ON : ஜூலை 01, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
'விஷ் யூ ஹேப்பி பர்த் டே...' என்ற நண்பர்களின் வாழ்த்து மழைக்கு மத்தியில், பெஞ்சில் ஆஜரானார் குப்பண்ணா.

நாயர், அவருக்காக ஸ்பெஷல் கேக் வாங்கி வைத்திருந்தார். அதை வெட்டி, நண்பர்களுக்கு வழங்கினார் குப்பண்ணா.

கேக்கை சுவைத்தபடியே, ''புகார் அளிக்க வர்றவங்க கிட்டயே மீட்டர் போட்டுடுறாருங்க...' என்றார், அந்தோணிசாமி.

''யாருவே அந்த போலீஸ்காரர்...'' என, பட்டென கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

''திருவள்ளூர் மாவட்டத்தில், சிவன் கோவிலுக்கு பேர் போன ஊருல இருக்கிற போலீஸ் அதிகாரியை தான் சொல்றேன்... வழிப்பறி, விபத்து, குடும்ப தகராறுன்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றவங்ககிட்ட கட்டப்பஞ்சாயத்து பேசுறாருங்க...

''வழக்கு போட ஒரு தொகை, எதிர் தரப்பை, 'ஆப்' செய்ய ஒரு தொகைன்னு வாங்கிடுறாருங்க... விபத்து வழக்குன்னா, 5,000 முதல், 10,000 ரூபாய் கறந்துடுறாருங்க...

''மண் கடத்தும் லாரிகளிடம் மாதம், 20,000, நில தகராறு பிரச்னைக்கு, 10,000 ரூபாய்னு வசூல் பண்றாருங்க... ஸ்டேஷனுக்குள்ள காலடி எடுத்து வச்சாலே, பணம் தரணும்கிற கொள்கையை அமல்படுத்தியிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சாரதி, இங்கன உட்காரும்...'' என்ற அண்ணாச்சியே, ''80 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டிருக்காவ வே...'' என்றார்.

''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''சென்னை, வேளச்சேரி, வி.ஜி.பி., செல்வா நகர்ல, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான, 10 கிரவுண்ட் நிலத்தை தனியார் சிலர், 25 வருஷமா ஆக்கிரமித்து வச்சிருந்தாவ வே...

''அரசியல் கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகள் ஆதரவுடன், நிலத்தை, 'ஆட்டை' போட திட்டமிட்டிருந்த இடத்தை, 177வது வார்டு கவுன்சிலர் மணிமாறன் ஏற்பாட்டுல மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுட்டாவ வே...

''இப்ப, மீட்கப்பட்ட அந்த நிலத்துல, மாநகராட்சிக்கு சொந்தமா சமூக நலக்கூடம் கட்டும் பணிகளை துவங்கிட்டாவ... 'ஏசி' வசதியுடன் கட்டப்படும் இந்த சமூக நலக்கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, 7 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''காட்டை காப்பாத்தற துறையில சகட்டுமேனிக்கு முறைகேடுகள் நடக்கறது ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''துறையின் முக்கியமான பெண் அதிகாரியின் கணவர், பெரிய இடத்துக்கு நெருக்கமா இருக்கறதால, யாரையும் மதிக்க மாட்டேங்கறார்...

''அவரது அறிவுறுத்தலின்படி, துறையின் தலைமை அதிகாரிக்கு அழுத்தம் குடுத்து, 36 ரேஞ்சர்களுக்கு கேட்ட இடத்துக்கு டிரான்ஸ்பர் போட்டு, துறையின் முக்கிய புள்ளி தரப்புல வசூல் பண்ணியிருக்கா ஓய்...

''அதுலயும், முதுமலைக்கு போறதுக்கு, 20 லட்சம் ரூபாய் வரை கைமாறியிருக்கு... இன்னொரு புறம், பெண் அதிகாரியின் ஆதரவு பெற்ற முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகங்களின் அதிமுக்கிய அதிகாரிகள், வேற லெவல்ல சம்பாதிக்கறா ஓய்...

''ஆனைமலை அதிகாரிக்கு, கோவையும் கூடுதல் பொறுப்பா குடுத்திருக்கா... 'ஹாகா' எனப்படும் மலையிடப் பாதுகாப்பு குழுமத்துக்குள்ள வர்ற, லே - - அவுட்களுக்கான, என்.ஓ.சி.,யை இவர் தான் தரணும் ஓய்...

''இதுக்கு, ஏக்கருக்கு இவ்வளவுன்னு ரேட் நிர்ணயம் பண்ணி, வசூலை வாரி குவிக்கறார்... இவரது மகள் கொச்சியில் டாக்டருக்கு படிக்கறாங்க... அவங்க பீஸ், 20 லட்சத்தை ரேஞ்சர்கள் தலையில சுமத்திடறார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''ராமசுப்பிரமணியன் வர்றாரு... பேச பிடிச்சா விட மாட்டாரு வே...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் இடத்தை காலி செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us