Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஆளில்லாமல் கதறும் அரசு டாக்டர்கள்!

ஆளில்லாமல் கதறும் அரசு டாக்டர்கள்!

ஆளில்லாமல் கதறும் அரசு டாக்டர்கள்!

ஆளில்லாமல் கதறும் அரசு டாக்டர்கள்!

PUBLISHED ON : ஜூலை 31, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
''தி.மு.க., கூட்டணிக்குள் சில முஸ்லிம் கட்சிகள் அதிருப்தியில இருக்குறாங்க பா...'' என்றபடியே கடைசி மடக்கு டீயை குடித்து முடித்தார் அன்வர்பாய்.

''என்ன விவகாரமுங்க...'' எனக்கேட்டார் அந்தோணிசாமி.

''தமிழக அரசின் சிறுபான்மையினர் ஆணையத்திற்கு தலைவர், துணை தலைவர், 9 உறுப்பினர்களை நியமிச்சாங்க... அதோட, சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்திற்கு புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டாங்க பா...

''இதில், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட சில முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த ஒருத்தருக்கு கூட சான்ஸ் கிடைக்கலியாம்... ஆட்சி அமைஞ்ச பிறகு, வாரிய தலைவர் பதவி கேட்டும், தி.மு.க., தலைமைகண்டுக்கலியாம்...

''வக்பு வாரியம், ஹஜ் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்திலும் தங்களுக்கு பிரதிநிதித்துவம் தரலியேன்னு வருத்தத்துல இருக்குறாங்களாம் பா...'' என்றார் அன்வர்பாய்.

''போஸ்டர் விவகாரம் பெரும் புகைச்சலா மாறிட்டு வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார்குப்பண்ணா.

''விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ல ஜெயிச்ச தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவின் நன்றி அறிவிப்பு கூட்டம், தனியார் கல்யாண மண்டபத்துல தடபுடலா நடந்துட்டு...

''பிரமாண்டமா அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள்ல, அமைச்சர் பொன்முடி, எம்.பி., ஜெகத்ரட்சகன் பெயர்களை கொட்டை எழுத்துல பெரிசா போட்டிருந்தாவ...

''ஆனா, கூட்டத்துல கலந்துக்கிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரான எம்.பி., ரவிக்குமாரின் பெயரை, தி.மு.க., மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளின் பெயர்களோட சேர்த்து கூட்டத்தோட கூட்டமா பொடிசா போட்டிருந்தாவளாம்...

''இதனால டென்ஷனான வி.சி., நிர்வாகிகள் கூட்டத்தையே புறக்கணிச்சிட்டாவ... இடைத்தேர்தல் நேரத்துல இருதரப்புக்கும் ஏற்பட்ட உரசலே இன்னும் சரி செய்யப்படலியாம்...

''அதுக்குள்ள, போஸ்டர் அடிச்சு எங்களை இன்னும் கேவலப்படுத்திட்டாவளேன்னு வி.சி., நிர்வாகிகள் கொந்தளிக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''டாக்டர்கள் இல்லாம, அரசு ஆஸ்பத்திரி தத்தளிக்கறது ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்.

''சென்னை, கிண்டியில கலைஞர் நுாற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி இருக்கோன்னோ... இங்க நாளுக்கு நாள் நோயாளிகள் கூட்டம் அள்ளுறது...

''இதய சிகிச்சை பிரிவுல மட்டும் தினமும் 200க்கும் அதிகமான புறநோயாளிகளும், 100க்கும் அதிகமான உள்நோயாளிகளும் சிகிச்சை எடுத்துக்கறா... 150க்கும் அதிகமா, 'எக்கோ' பரிசோதனை செய்யறா...

''ஆனா, 7 ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் தான் இருக்காளாம்... பணிச்சுமையால டாக்டர்களுக்கே அப்பப்ப நெஞ்சு வலிக்கறதாம்... நோயாளிகளும், நேரத்துக்கு ட்ரீட்மென்ட் கிடைக்காம தவிக்கறா...

''சிறுநீரக துறையில் ஒரே ஒரு டாக்டர் தான் இருக்காராம்... தினமும், 35க்கும் அதிகமான நோயாளிகள் வந்து, 'டயாலிசிஸ்' செஞ்சுக்கறா... மற்ற துறைகளிலும் இதே நிலைமை தானாம்...

''அதனால, டாக்டர்கள், நர்ஸ்கள் எண்ணிக்கையை அதிகரிச்சு எங்களை முதல்வர் தான் காப்பாத்தணும்னு ஊழியர்கள் கதறிண்டு இருக்கா ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, பெரியவர்கள் புறப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us