/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கோபாலபுரத்தில் இலவச 'பாக்சிங்' பயிற்சி கோபாலபுரத்தில் இலவச 'பாக்சிங்' பயிற்சி
கோபாலபுரத்தில் இலவச 'பாக்சிங்' பயிற்சி
கோபாலபுரத்தில் இலவச 'பாக்சிங்' பயிற்சி
கோபாலபுரத்தில் இலவச 'பாக்சிங்' பயிற்சி
PUBLISHED ON : மார் 14, 2025 12:00 AM

சென்னை, சென்னை, கோபாலபுரத்தில் துவக்கப்பட்டுள்ள, குத்துச்சண்டை அகாடமியில், மாணவர்களுக்கு இலவசமாக குத்துச்சண்டை பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் சேரலாம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கடந்த மாதம் சென்னை, கோபாலபுரத்தில் 8 கோடி ரூபாய் செலவில், புதிய குத்துச்சண்டை அகாடமி திறக்கப்பட்டது. அங்கு அவ்வப்போது போட்டி நடத்தப்படுகிறது.
அத்துடன் 7 வயது முதல், 19 வயதுக்கு உட்பட்ட, 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, தினமும் காலை மற்றும் மாலை, குத்துச்சண்டை பயிற்சி, இலவசமாக அளிக்கப்படுகிறது. சீனியர் குத்துச்சண்டை வீரர்களும், இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
குத்துச்சண்டை பயிற்சி அளிக்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பயிற்சியாளராக செல்லபதி நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், அகாடமிக்கு வரலாம் என, ஆணையம் தெரிவித்துள்ளது.