/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தினமும் அம்மன்: 15-அநீதியை அழிப்பவள் தினமும் அம்மன்: 15-அநீதியை அழிப்பவள்
தினமும் அம்மன்: 15-அநீதியை அழிப்பவள்
தினமும் அம்மன்: 15-அநீதியை அழிப்பவள்
தினமும் அம்மன்: 15-அநீதியை அழிப்பவள்
PUBLISHED ON : ஜூலை 31, 2024 12:00 AM

அநீதிக்கு ஆளானவர்கள் திருப்பூர் கரியகாளியம்மனுக்கு செவ்வரளி மாலை சாத்தி எலுமிச்சை தீபமேற்ற வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
நொய்யல் ஆற்றங்கரையில் 'அமுக்கியம்' என்னும் இடத்திலுள்ள சோழர்கால கற்கோயில் இது. மன்னர் ஒருவரின் கனவில் குழந்தையாக காட்சியளித்த காளி, 'குறிப்பிட்ட நாகலிங்க மரத்தின் அடியில் சிலை வடிவில் இருக்கிறேன்' எனத் தெரிவித்தாள். சிலையை பிரதிஷ்டை செய்து கலைநயம் மிக்க கோயிலாகக் கட்டினார் மன்னர். கையில் சூலாயுதம் ஏந்தி, அரக்கனைக் காலில் மிதித்த கோலத்தில் காளியம்மன் இருக்கிறாள். முகத்தில் சாந்தம் இருந்தாலும், தன்னைச் சரணடைந்த பக்தருக்கு அநீதி இழைக்கப்பட்டால் ஆக்ரோஷமாக தண்டிக்கிறாள்.
ஒருபுறம் விநாயகர், மறுபுறம் முருகன் சன்னதிகள் உள்ளன. பேச்சியம்மன், காவல் தெய்வம் கருப்பணசாமி சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது
திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 12:30 மணி
தொடர்புக்கு
97883 38118