/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆட்டோ ஓட்டுநர் காயம் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆட்டோ ஓட்டுநர் காயம்
ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆட்டோ ஓட்டுநர் காயம்
ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆட்டோ ஓட்டுநர் காயம்
ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆட்டோ ஓட்டுநர் காயம்
PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM

அம்பத்துார், திருமுல்லைவாயலைச் சேர்ந்த சதீஷ்குமார், 35. இவர், ஜாபர்கான்பேட்டை தனியார் நிறுவனத்தின், 'டாடா ஏஸ்' லோடு வாகனத்தை, நேற்று முன்தினம் மதியம், அம்பத்துார் தொழிற்பேட்டை முதல் பிரதான சாலையோரமாக நிறுத்திவிட்டு, சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது, லோடு வாகனத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலைக்கு பயன்படுத்தக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர்களில் ஒன்று, வெடித்து சிதறியது.
அதன் ஒரு பாகம், சதீஷ்குமார் மீது விழுந்ததில், அவருக்கு முகம் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்தில், 'டாடா ஏஸ்' வாகனத்தின் பின் பகுதி சேதமடைந்தது. அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.