PUBLISHED ON : ஜூலை 03, 2024 12:00 AM
வேப்பேரி, சென்னையில்,கடந்த 7 நாட்களில் வெவ்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 27 கிலோ கஞ்சா, 6,622 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 97,000 ரூபாய், இரண்டு இருசக்கர வாகனம், ஆட்டோ ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.